வடமொழி மிகை இல்லாத இனிய தமிழ்ப் பாடல்கள்

இந்த பதிவை வெறும் தமிழ் மேல் உள்ள அன்பால் தொகுத்ததாக எடுத்துக் கொள்ளுங்கள். மொழி/ ஜாதி பற்றிய தமிழக/திராவிட அரசியல் அல்லது வேறு விரிவான கண்ணோடத்தில் பார்க்கையில், இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கமால் போனால், நான் பொறுப்பல்ல !

கடந்த 15-20 ஆண்டுகளில் வந்த தமிழ்த் திரைப்பாடல்களில், முடிந்த அளவு வடமொழி வார்த்தைகளை பயன் படுத்தாமல், வெளி வந்துள்ள பாடல்களின் வரிகளை இங்கு மறுமுறை நினைவுகூர்ந்து மகிழ்வோம்.
——–
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதறள நீர்வடிய கொட்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதறள நீர்வடிய கொட்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
——————————————–
ஒரு மாலை இளவெயில் நேரம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே.. கண்டேனே…
(ஒரு மாலை..)

பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே
(ஒரு மாலை..)

பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தேனே
தடுமாறி போனேனே
(லா லா….)
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே….
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே….
(அவள் அள்ளி விட்ட..)
————————————
பின்வரும் பாடலை தெரிவித்த நண்பருக்கு நன்றி
நன்றி: http://www.hi2web.com/forum/showthread.php?t=963

மயிலிறகே… மயிலிறகே வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே… மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா…

உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே…
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே…
மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா…

மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா…மெதுவா..மெதுவா… இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்…
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகே…. மயிலிறகே வருடுகிறாய் மெல்ல….
மழை நிலவே… மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா…..
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே…..
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே….

தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்…அமிர்தாய்…அமிர்தாய்… கவி ஆர்த்திட நீ வருவாய்…….

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால்உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா……..?பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே…. மயிலிறகே வருடுகிறாய் மெல்ல….
மழை நிலவே… மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா…..

உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே…
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே…
மயிலிறகாய்… மயிலிறகாய் வருடுகிறாய்… மெல்ல

வருடுகிறாய்… மெல்ல
வருடுகிறாய் மெல்ல..
வருடுகிறாய்….மெல்ல
வருடுகிறாய் மெல்ல…
————

Advertisements
This entry was posted in தமிழ் [ Tamil ]. Bookmark the permalink.

2 Responses to வடமொழி மிகை இல்லாத இனிய தமிழ்ப் பாடல்கள்

  1. nabhan says:

    Another song “mayilirage mayilirage varudugirai mella,mazhai nilave mazhai nileva vizhiyilelam un ula” from Anbe Aruyire (A ,AA) .written by Valli

    • exerji says:

      மிக்க நன்றி, அன்பரே. வேறு ஏதும் ஞாபகம் வந்தால் தெரியப் படுத்துங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s